Ads (728x90)

பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட 9 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் முற்கூட்டிய நுழைவு விசா இன்றி இலங்கைக்கு வர முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சலுகையின் அடிப்படையில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, தென்கொரியா, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசைவைப் பெறாமல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.

வெசாக், பொசன் பண்டிகை காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget