Ads (728x90)

வியட்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் அன் ஆகியோருக்கிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க இரண்டாவது சந்திப்பு நேற்று இடம் பெற்றுள்ளது.

ஹனோயிலுள்ள மெற்ரோபோல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் 2600 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இரு நாட்டு தலைவர்களும் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த பின்னர்  நேருக்கு நேர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை குறித்து தமது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த ஜனாதிபதிகள் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Recent News

Recent Posts Widget