பாகிஸ்தான் சிறைப்பிடித்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நாளை விடுவிக்கவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது.
இந்தநிலையில் பாகிஸ்தானில் உள்ள விங் கமாண்டர் அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியிருந்தது.
எனினும் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாராளுமன்றத்தில் அறிவித்து உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைதிக்கான நடவடிக்கையாக இந்திய விமானி நாளை விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
அபிநந்தன் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment