ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள 40ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து முன்வைத்துள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன. இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் காலதாமதங்கள் மற்றும் மந்தகதியிலான முன்னேற்றங்கள் குறித்து சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களான சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், நீதிக்கான சர்வதேச ஆணைக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவைகள் உள்ளிட்ட 9 அமைப்புக்கள் இணைந்து இந்த அறிக்கையை முன்வைத்துள்ளன.
Post a Comment