புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை நேற்று அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. காஷ்மீர் எல்லை பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் கட்ச் அருகே பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை விட துல்லியமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment