Ads (728x90)

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாதிரி வீட்டுதிட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 150 மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்படும் என்று வவுனியா முருகனூர் ஆனந்தபுரம் கிராமத்தில் வீட்டு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா முகாமையாளர் வி.எம்.வி.குருஸ் தெரிவித்தார்.

கடந்த வருடம் வவுனியாவில் 68 மாதிரிக் கிராமங்களிற்கு அடிக்கல் நாட்டபட்டது. இவ்வருடம் இது வரையிலான காலபகுதியில் 23 மாதிரிக் கிராமங்களிற்கான அடிக்கல்கள் நாட்டபட்டுள்ளது. முழுவதுமாக வவுனியா மாவட்டத்திற்கு 150 மாதிரிக் கிராமங்கள் வீடமைப்பு அதிகாரசபையால் அமைக்கபடவுள்ளன என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget