Ads (728x90)

நியூசிலாந்தின்  கிரிஸ்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாக்குதலில் 48 பேர் காயமடைந்துள்ள நிலையில், அதில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்துப்பாக்கி தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என கைது செய்யப்பட்டுள்ள நபர் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்துள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget