Ads (728x90)

போதைப்பொருள் பாவிப்பவர்களின் பெயர் பட்டியலை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவுக்கோ, பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கோ வழங்குவதில் எந்த பயனும் இல்லை. அதனால் நடவடிக்கை எடுக்கக் கூடியவர்களுக்கு அந்தப் பட்டியலை வழங்கியுள்ளேன் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

கொக்கைன் போதைப்பொருள் பாவிக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியலை கட்சியின் செயற்குழு கூடியபோது வெளிப்படுத்தாமல் இருந்ததற்கு காரணம் என்னவென வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கொக்கைன் பாவிப்பவர்களாக இருப்பதாக நான் தெரிவித்திருந்தேன். அது தொடர்பில் பலரும் என்னை விமர்சித்து வருகின்றனர். என்னை விமர்சிப்பதில் பயனில்லை. அவர்கள் இந்த போதைப்பொருளை பாவிப்பதில்லை என்றால் அவர்கள் இரத்த பரிசோதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தினால் பிரச்சினை முடிந்துவிடும் எனவும் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget