மகா சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் அதாவது 05.03.2019 ந்திகதி செவ்வாய்க்கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேற்படி தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விடுமுறைக்கு பதிலாக பாடசாலை நடாத்துவதற்கான மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment