Ads (728x90)

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம் ஒன்றை அமைப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துதல், குற்றங்களை குறைத்தல் தொடர்பான சட்ட வரைபுகள் தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நீண்டகாலம் செல்கின்றமை, போதைப்பொருள் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பெரும் தடையாகவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமை விரைவில் சரி செய்யப்பட வேண்டுமென சுட்டிக் காட்டினார்

போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக இன்று நாட்டின் அனைத்து மக்களும் கவனம் செலுத்தி இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக புனர்வாழ்வு அதிகார சபை ஒன்றை தாபிப்பதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியின் தலையீட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வதிகார சபையை தாபிக்கும் வரை குறித்த திட்டங்களை தயாரிப்பதற்கு நிர்வாக சபை ஒன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஜனாதிபதியால் விரிவாக ஆராயப்பட்டது.


Post a Comment

Recent News

Recent Posts Widget