காலியில் நடைபெற்ற மரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த வான் விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கற்றன்-கொழும்பு வீதியின் வட்டவளை பகுதியில் இன்று காலை இடம் பெற்ற விபத்தில்10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
காலியில் மரணவீடொன்றுக்கு சென்று கற்றன் நோக்கி வந்த வான் ஒன்று பாதையை விட்டு விலகி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து குடியிருப்பு ஒன்றுக்கு அருகில் குடைசாய்ந்துள்ளது.
வானில் பயணித்தவர்களில் மூன்று பெண்கள் உட்பட 10 பேர் காயமுற்று வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment