12 ஆவது ஐ.சி.சி. ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மே 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இப்போட்டி தொடருக்கான திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியின் 15 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளது. அணியில் இடம் பெறுவோர் விபரம் பின்வருமாறு,
1. திமுத் கருனாரத்ன (அணித்தலைவர்) 2. அவிஷ்க பெனாண்டோ 3. லஹிரு திரிமான்ன 4. குசல் மெண்டிஸ் 5. குசல் ஜனித் பெரேரா 6. அஞ்சலோ மெத்திவ்ஸ் 7. தனஞ்சய டி சில்வா 8. ஜெப்ரி வந்தெர்செய் 9. திசர பெரேரா 10. இசுரு உதான 11. லசித் மாலிங்க 12. சுரங்க லக்மால் 13. நுவன் பிரதீப் 14. ஜீவன் மெண்டிஸ் 15. மிலிந்த சிறிவர்தன.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment