Ads (728x90)

மஹியங்கனையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து இன்று அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்ட 10 பேரின் சடலங்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பெருமளவானோர் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின்னர் சடலங்கள் பிற்பகல் கள்ளியங்காடு சேமக்காலை மற்றும் மாமாங்கம் பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget