கொழும்பு-கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றில் இன்று காலை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
இதேவேளை கொழும்பின் நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த 295 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 68 பேருடைய சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளதாக கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதன்போது உயிரிழந்த மேலும் 25 பேரின் சடலங்கள் கட்டான தேவாலயத்தில் உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 27 பேருடைய சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், 73 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த 6 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கிகாயமடைந்துள்ள 370 பேரில், 9 பேர் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment