இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயரில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள கிராமத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில் அமைச்சர் சஜித் பிரேமதாசா, குமார் சங்கக்கார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கிரிக்கெட்டில் சங்கக்கார கையாளும் உத்தியை அரசியல் களத்தில் நான் கையாண்டு வருகிறேன். சில சமயங்களில் பந்து செல்ல இடமளித்து, நேரம் தாழ்த்தி அதை ஆடுவார்கள். நானும் அப்படியான உத்திகளை கையாண்டேன்.
இந்த ஆண்டு எனது அரசியல் பயணத்தில் தொடர்ச்சியாக ஆறு ஓட்டங்களை அடுத்தடுத்து அடிக்கவே எதிர்பார்க்கிறேன் என்றார். நிகழ்வில் கலந்து கொண்ட சங்கக்காரவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
ஐ.தே.கவின் பொது வேட்பாளராக உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டது. எனினும் நீங்கள் அரசியலுக்கு வரமாட்டேன் என கூறியிருந்தீர்கள். இப்போது சஜித்துடன் வந்திருக்கிறீர்கள். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐ.தே.கவிற்குள் கருத்து முரண்பாடு நிலவுகிறதே? என கேள்வியெழுப்பப்பட்டது.
கட்சி முரண்பாடு தொடர்பாக நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க ரணில் பொருத்தமானவர். இதை நான் சொல்வதால் ஐ.தே.க ஆதரவாளனாக நினைக்க வேண்டாம். பொதுமகனாகவே சொல்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment