Ads (728x90)

2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று வியாழக்கிழமை இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.10 அணிகள் பங்குபற்றும் 2019ஆம் ஆண்டு உலக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடர் ஜூலை 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும்  இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மேலும் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்றுமூலம் இந்தத் தொடரில் நுழைந்துள்ளன.

இத்தொடரின் அரையிறுதிப் போட்டி ஜுலை 9ஆம் திகதியும் 2ஆவது அரையிறுதிப் போட்டி ஜுலை 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. அத்தோடு இறுதிப் போட்டி ஜுலை 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே இன்று ஆரம்பமாகின்றது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி  பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்குகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget