Ads (728x90)

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி நேற்று இரவு பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது.

2014-ம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைத்துள்ளது. நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு 7 மணிக்கு கோலாகலமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியுடன் அவரது புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget