கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை நீதியான விசாரணைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்தியுள்ள அதுரலிய ரத்ன தேரர், இதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு 24 மணி நேர காலக்கெடுவும் விதித்துள்ளார்.
இக்காலப்பகுதிக்குள் சிறிலங்கா ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கத் தவறினால் தன்னால் எடுக்கக்கூடிய அதி உச்ச தீர்மானத்தை எடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்யப் போவதாகவும் ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளுடன் நேரடித் தொடர்புகளை பேணிய கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தி நாடு முழுவதும் பரந்துவாழும் பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்கான அமைப்பின் செயலாளர்கள் அனைவரினதும் கையொப்பங்களுடன் மனு வொன்றை கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment