Ads (728x90)

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சிஹாப்தீன் ஷாபிக்கு எதிராக இன்று குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பிக்குகள், பாதிரியார் உள்ளிட்ட பலர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் குருநாகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தது.

வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் வைத்தியர் சரத் வீரபண்டாரவை இடமாற்றம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் முயற்சிப்பதாகத் தெரிவித்தும், வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அரசியல் தலையீடு இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget