Ads (728x90)

திண்ம மற்றும் அரைத்திண்ம உணவுப் பொருட்களில் உள்ளடக்கப்படும் சீனி, உப்பு மற்றும் ஏனைய சேர்மானங்கள் தொடர்பான நிறக்குறியீட்டை காட்சிப்படுத்தும் நடைமுறை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி கடந்த 17 ஆம் திகதி வௌியிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதி முதல் உற்பத்தி செய்யப்படும் அனைத்து உணவு உற்பத்திகளிலும், சீனி உள்ளிட்ட சேர்மானங்களுக்கான நிறக்குறியீட்டை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படக்கூடிய தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget