சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண ஊடாக அவர் இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
தம்மை பொலிஸ் மா அதிபர் பதவியில் செயற்படுவதை தடுத்த ஜனாதிபதியின் உத்தரவூடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இம்மனு ஊடாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய பதவியை இராஜினாமா செய்த முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவும் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்ய தீர்மனித்துள்ளார்.

Post a Comment