தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 104 ஓட்டத்தினால் வெற்றிபெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது .
12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது இன்று மாலை 3.00 மணிக்கு இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றது.
312 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 104 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
தென்னாபிரிக்கா அணிசார்பில் டீகொக் 68 ஓட்டத்தையும், வேன்டர் 50 ஓட்டத்தையும், பெலக்கெய்யோ 24 ஓட்டத்தையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணிசார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுக்களையும், பிளங்கட், பென்ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அடில் ரஷத், மொய்ன் அலி தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment