கெக்கிராவை , மடாடுகமவில் அமைக்கப்பட்டிருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசலொன்று பொது மக்களால் நேற்று உடைக்கப்பட்டது.
ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி குறித்த பள்ளிவாசலை இவ்வாறு உடைத்து அகற்றியுள்ளனர்.
பிரதேசத்தின் சிறுவர்களுக்காக நூலகம் ஒன்றை அமைக்க ஒதுக்கப்பட்ட காணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பால் வெளிநாட்டு நிதியுதவியுடன் பள்ளிவாசல் அமைக்கப்பட்டிருந்ததாக பிரதான பள்ளிவாசலின் தலைவர் எம்.எச்.எம் அக்பர் கான் தெரிவித்திருந்தார்.
மடாடுகம பிரதேச முஸ்லீம் மக்களால் மேற்படி பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ள நிலையில் , அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையொன்றும் அகற்றப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment