Ads (728x90)

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணியளவில் டவுன்டானில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்றது.

307 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் இரண்டு ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது.
10 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 51 ஓட்டங்களை பெற்றது. 19 ஆவது ஓவரில் 107 ஓட்டங்களையும், 25 ஆவது ஓவரில் 136 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டது. 29 ஆவது ஓவரில் 160 க்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது.

40 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இறுதியாக பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்று, 41 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டாக், கேன் ரிச்சர்ட்சன், கொல்டர் நைல் மற்றும் பிஞ்ச் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.




Post a Comment

Recent News

Recent Posts Widget