Ads (728x90)


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் புனர் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஆராதனையின் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

குண்டுத்தாக்குதலின் போது உயிர் இழந்தவர்களை நினைவு கூரும் முகமாக புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநாள் தினமான 13ஆம் திகதி காலை 10 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget