ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 19 ஆவது போட்டி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே நேற்று மாலை சவுதம்டனில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
213 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 33.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோனி பெயர்ஸ்டோ 45 ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 40 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஆடிய ரோய் 94 பந்துகளை எதிர்கொண்டு 11 நான்கு ஓட்டம் அடங்கலாக 100 ஓட்டத்துடனும், பென் ஸ்டோக் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment