ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லா, அஸாத் சாலி ஆகிய மூவரையும் உடனடியாக சிறையில் அடைக்குமாறு அரசாங்கத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சுப் பதவி மற்றும் ஆளுநர் பதவிகளைத் துறந்து விட்டார்கள் என்பதற்காக ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லா மற்றும் அஸாத் சாலி ஆகியோரை நாம் கவனிக்காமல் விடக்கூடாது. அவர்கள் மூவரையும் அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இவர்கள் மூவரையும் பதவி நீக்கக் கோரி நான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன். நான்காவது நாளில் இவர்கள் மூவரும் தாமாகவே பதவிகளைத் துறந்துள்ளனர். அதேவேளை இவர்களுடன் இணைந்து அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளைத் துறந்துள்ளனர்.
இவர்களை காப்பாற்றுவதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கமாக இருக்கின்றது. அதற்காகவே அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளைத் துறந்துள்ளனர். ஆனால், ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லா, அஸாத் சாலி ஆகிய மூவரையும் தப்பிக்க நாம் விடமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment