Ads (728x90)

பாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிக்கவும்  மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உயர்ந்த ரக அரிசியை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளததாக கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர்பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சு  உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து உயர்ந்த ரக அரிசியை உற்பத்தி செய்து இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது. 

இதன் முதற்கட்டம் அநுராதபுர மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ளதோடு, 5 ஆம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களுக்கு அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அநுராதபுரத்தில் 500 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளுக்கு விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget