Ads (728x90)

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப் பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த விடயத்தில் அநாவசிய தலையீடுகள் செய்யவேண்டாம் என முஸ்லிம் தலைமைகளுக்கு காத்திரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதாக அதன் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் தலைமைகள் அநாவசியமாக தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவே நாம் கருதுகின்றோம்.

கல்முனை வடக்கு நிலத்தொடர்பு கொண்ட பிரதேசம். அதுமட்டும் அல்ல இது தமிழர்கள் வாழும் பகுதி. இதில் புதிதாக எல்லை நிர்ணயம் ஒன்றினை செய்யவேண்டிய எந்தவித தேவையும் இல்லை. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் நிலத்தொடர்பு இல்லாதது. இதில் தான் எல்லை நிர்ணயங்கள் செய்தாக வேண்டும்.

இது அவர்களின் பிரச்சினை, இதனை தீர்க்க தெரிவுக்குழு அமைத்துக்கொள்வது அவர்களின் பிரச்சினை. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் அநாவசியமாக முஸ்லிம் பிரதிநிதிகள் தலையிட்டு தமிழர்களின் பிரச்சினைகளை குழப்புவது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்தார்.   




Post a Comment

Recent News

Recent Posts Widget