அக்காணியில் முஸ்லிம்களை குடியேற்றும் வகையில் தொடர்மாடி ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ரிஷாட் பதியுதீன் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்தக் காணிக்குள் நுழைந்த நாவாந்துறையைச் சேர்ந்த தமிழ் மக்கள், அது அரச காணி என்றும் அதனை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அபகரித்து வைத்துள்ளார் என்றும் தெரிவித்தனர். அத்துடன் குறித்த காணியில் நாவாந்துறையைச் சேர்ந்த காணியற்ற தமிழ் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற யாழ்.மாநகர சபை உறுப்பினர் நிலாம், அந்தக் காணிக்கான உறுதி தம்மிடம் இருப்பதாகவும் அதனை அரச காணி எனத் தெரிவித்து எவரும் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்தார்.
இவ்வேளையில் சம்பவ இடத்துக்கு சென்ற யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் அதனை அரச காணி எனத் தெரிவித்ததுடன், தனியாரிடம் உறுதி இருப்பது குறித்து ஆராயவுள்ளதாகவும், பிரதேச செயலகத்துக்கு வந்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறும் பொது மக்களிடம் தெரிவித்தார்.
Post a Comment