Ads (728x90)

ஞானசார தேரர் கல்முனை உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக முடித்து வைத்தார். 5 நாளிலும் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி என்னால் பெற்று தர முடியும். ஆனால் விளைவுகள் மோசமாக இருக்கும். நிதானமாக இந்த நடவடிக்கையை செயற்படுத்த எனக்கு ஒரு மாதம் அவகாசம் தாருங்கள். அதற்குள் இதனை செய்து தருவேன்.

பல்வேறு மட்டங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. எங்களினால் அந்த பேச்சு வார்த்தை ஆரோக்கியமாக முற்று பெறும் என நம்புகின்றேன். இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். எனவே தான் எமது அரசியல்வாதிகளின் இருவேடங்களை களைந்து நாம் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் நாம் செயற்படுவோம்.

ஒரே நாட்டின் தாய் பிள்ளைகளை போல நாம் செயற்பட முன் வர வேண்டும். விரைவில் இந்த பிரச்சினையை முடித்து பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன் என்கின்ற அந்த செய்தி மிக விரைவில் உங்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget