Ads (728x90)

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய முன்றலில் பௌத்த பிக்கு தலைமையில் சிங்களவர்கள மக்களால் நேற்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மணலாற்றிலிருந்து அழைத்து வரப்பட்ட சிங்களவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதற்கு புல்மோட்டை பகுதியிலிருந்து பௌத்த பிக்குகளும் வருகை தந்திருந்தனர்.

செம்மலைப் பிள்ளையார் ஆலய சூழல் குருகந்த ரஜமஹா விகாரை அமைந்துள்ள பகுதியாகும். இந்தப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையீடு செய்து எமக்கு ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

அத்துமீறி விகாரை அமைக்கப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று அனுமதி வழங்கியிருந்தது. இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்று கட்டளையிட்டது.

இந்நிலையில் மீண்டும் நேற்றைய தினம் பௌத்த பிக்குகளும் சிங்களவர்கள் சிலரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.         

Post a Comment

Recent News

Recent Posts Widget