நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்க வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டாலும் அதில் முன்னிலையாக மாட்டேன். அது அலரி மாளிகையில் உருவாக்கப்பட்ட நாடகம் என ஜனாதிபதி தெரிவித்தார்.
2020ம் ஆண்டு வளமான ஆண்டாக அமையும். அடுத்த ஜனாதிபதியாக யார் தெரிவானாலும் 19வது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டும். அது நாட்டின் சாபக்கேடு. அரசசார்பற்ற நிறுவனங்களினால் அது தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
சோபா உடன்படிக்கைக்கு தான் முற்றிலும் எதிரானவர் என்றும், அது வெளிநாட்டு படைகளை வரவழைக்கும் ஆபத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அவசரகாலச்சட்டம் இன்னும் ஒரு மாதம் மாத்திரமே நீடிக்கப்படும் என்றும், பொதுத் தேர்தலை நடத்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்படுவதாக வரும் செய்திகள் தவறானவை என்றும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment