சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் எரிபொருள், பயணிகளுக்கான வரி உள்ளிட்ட கட்டணங்களை அடுத்த ஆறு மாதங்களுக்கு குறைத்து அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, பிரதமர் அலுவலகம், சுற்றுலா அமைச்சு மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை ஆகியன இணைந்து இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தன.
கடந்த வருடத்தில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததாகவும், 4.4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப் பட்டதாகவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment