சீரற்ற காலநிலை காரணமாக நாட்டிலும் நாட்டைச்சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் பலத்த காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 4,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 வீடுகள் முழுமையாகவும், 703 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன எனவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, கண்டி, களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளதுடன் குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ,வடமேல், வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் இதனைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்றும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் மீனவர்களை இன்று கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment