Ads (728x90)

யாழ்ப்பாணம்-மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும், காவலில்  ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை வழிமறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற வாள் வெட்டு குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget