www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக தாம் தெரிவாகியுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை 30,830 பேர் பல்கலைக்கழக கற்கைநெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தைவிட இம்முறை 645 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment