ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கும், சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் எங்கோ ஒரு இடத்தில் தொடர்பு இருந்துள்ளது என்று தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார இறுதி தினத்தையொட்டி நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வில் உரையாற்றியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மரணதண்டனை அமுல்படுத்தினால் ஜீ .எஸ். பி. பிளஸ் சலுகை ரத்துச் செய்யப்படுமென்று இறையாண்மை உள்ள எமது நாட்டை ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கிறது. இது நல்லதல்ல என்றும் தெரிவித்த ஜனாதிபதி பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரம் நடத்தி ஆயுதங்களை வாங்கினார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்சியாளர்களை தீர்மானிப்பது போதைப்பொருள் வர்த்தகர்கள். ஆனால் நாங்கள் அவற்றுக்கு அஞ்சவில்லை. பல நாடுகளில் இன்னும் மரணதண்டனை அமுலில் உள்ளது.
நாட்டின் தலைவர்கள் , அரச சார்பற்ற நிறுவனங்கள் , உலக நாடுகள் இன்று இதைப்பற்றி பேச ஆரம்பித்துள்ளன. ஐ.நா செயலருக்கு நான் இதைப்பற்றி தொலைபேசியில் விளக்கிக் கூறினேன்.நாட்டை காப்பாற்ற இந்த தீர்மானத்தை எடுத்தேன்.
கட்சியின் கொள்கை மரணதண்டனை அல்லவென ஒரு கட்சி கூறுகிறது. எதிர்க்கட்சி இன்னுமொன்றை கூறுகிறது. போதைப்பொருள் ஒழிக்க இவர்கள் என்ன செய்தார்கள்? ஒன்றும் செய்யவில்லை. போதைப்பொருள் பாவித்து சீரழிந்த இளைஞர்களின் குடும்பங்களை பாருங்கள்.
புகைபிடிப்பது தொடர்பில் சட்டம் கொண்டுவந்தது போல சட்டங்கள் வருகின்றன. மரணதண்டனை என்பது நீதிமன்ற தீர்ப்பு. அதனை நான் அமுல்படுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment