Ads (728x90)

போதைப்பொருள் வர்த்தகம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே கொச்சைப் படுத்தும் செயல் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரபாகரன் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு ஆயுதப் போராட்டத்தை நடத்தியதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

பிரபாகரன் நடத்திய போராட்டத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது. புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழர்கள் அதற்கு பெருமளவான நிதிப் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். இந்த பின்னணியில் வரலாறு தெரியாமல் உளறுவது முற்றுமுழுதான தவறு. அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு பொய்த்தகவல். இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்னெப்போதும் இருந்ததில்லை என்று அவர் தெரிவித்தார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget