Ads (728x90)

யாழ்ப்பாண குடாநாட்டில் ஆவாக் குழுவினரின் அடாவடிகள் இன்னமும் அடங்கவில்லை. அவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்..

மானிப்பாயில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞர் வாள்வெட்டுக் குழுவான ஆவாக் குழுவின் உறுப்பினராவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவர் வீடொன்றில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தனது சகாக்களுடன் வாள்கள் மற்றும் கூரான ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இவர்களைப் பொலிஸார் சோதனைக்காக மறித்தபோது குறித்த இளைஞரும், ஏனையவர்களும் தப்பியோடினார்கள். இதனையடுத்தே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதன்போது குறித்த இளைஞர் உயிரிழந்தார்.

இவரும், இவருடன் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களும் பெரும் குற்றவாளிகள் எனப் பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. தப்பியோடியவர்களில் மூவர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேவேளை உயிரிழந்த இளைஞரின் ஏனைய சகாக்கள் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண குடாநாட்டில் ஆவாக் குழுவினரின் அடாவடிகள் இன்னமும் அடங்கவில்லை. அவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம். அப்போதுதான் அங்கு பதற்றம் இல்லாத நிலைமை உருவாகும்.
ஆவாக் குழுவில் உள்ளவர்கள் அங்குள்ள இளைஞர்களே. இவர்கள் ஈவிரக்கமற்ற அடாவடிகளில் ஈடுபடுகின்றனர். எனவே பெற்றோர் தமது பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget