Ads (728x90)

ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனவின எண்ணக்கருவிற்கு அமையை தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் 'தேசிய பால் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்' வடமாகாண அங்குரார்ப்பண நிகழ்வு ஆளுநர் தலைமையில் நேற்று காலை யாழ்.திருக்குடும்ப கன்னியர் மடம் பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தழிழ் மொழி வாழவேண்டும். நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள். எனவே பாரதி சொன்னது போல் ஏனைய மொழிகளை படியுங்கள். ஆனால் தமிழை தாயாக கொண்டிருங்கள் என இந்நிகழ்வில் உரையாற்றும்போது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்த திட்டம் சுமார் 4 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இடம் பெறுகின்றது. இந்நிகழ்வு வடமாகாணத்தின் 5 பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப கல்விப் மாணவர்களின் போசாக்கு நிலையை உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget