மெல்போர்னில் கடந்த 27 ஆம் திகதி இந்த அழகிப் போட்டி நடைபெற்றது. இதன்போது பிரியா செராவோ அவுஸ்திரேலிய அழகியாக மகுடம் சூடினார். விரைவில் நடைபெறவுள்ள உலக அழகி போட்டிக்கு அவுஸ்திரேலியாவின் சார்பாக அவர் பங்கேற்கவுள்ளார்.
எனக்கு இது முதல் அழகிப் போட்டி. இதற்கு முன் எந்த ஒரு போட்டியிலும் பங்குபற்றியது கிடையாது. மாடலிங் செய்ததும் கிடையாது. நான் அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன். போட்டியில் வென்று மிஸ் அவுஸ்திரேலியா பட்டம் வென்றது பெரிய ஆச்சரியம் அளிக்கிறது என பிரியா செராவோ கூறியுள்ளார்.
சட்டம் படித்துள்ள பிரியா, மெல்போர்னில் மாநில அரசு ஒன்றில் வேலை வழங்கும் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment