பலாலி விமான நிலையம் மூன்று கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. முதற்கட்ட பணிகளுக்காக சுமார் 2 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக 2250 மில்லியன் ரூபா தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஊடாக 1950 மில்லியன் ரூபாவும், இந்திய நிதியுதவியின் ஊடாக 300 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விமான நடவடிக்கை செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடுதளத்தின் முதலாவது 950 மீற்றர் பாதை புதிதாக நிர்மாணிக்கப் படவுள்ளது. திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் குறித்த பிரதான ஓடுதளத்தின் 1.5 கிலோமீற்றர் பாதை மேலதிகமாக நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதனை பூர்த்தி செய்த பின்னர் பலாலி விமான நிலையத்தில் இருந்து 1800 சதுர கிலோமீட்டர் வரையான ஆகாய மார்க்கத்தில் விமானங்கள் பயணிப்பதற்கான வழியேற்படும்.
இத்திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் பிரதான விமான ஓடுதளத்தின் 2.3 கிலோமீட்டர் பாதை முற்றாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அந்த கட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், AL 320 மற்றும் AL 321 ரக விமானங்கள் பலாலி விமான நிலையத்தில் இருந்து பிராந்திய விமான நிலையங்களுக்கு பயணிக்கவுள்ளன.

Post a Comment