Ads (728x90)

மரண தண்டனையை நிறைவேற்றுவதை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஊடகவியலாளர் மாலிந்த செனவிரத்னவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, ஜனக் டி சில்வா, அச்சலா வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய 05 நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget