பொலனறுவையில் மஹாவலி காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக நான் எடுத்துள்ள நடவடிக்கைகள் எனக்கு உயிராபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த சதித் திட்டங்களுக்குப் பின்னால் போதைப்பொருள் கட்த்தல் காரர்கள் உள்ளனர், இதற்காக அவர்கள் நிறைய பணம் செலவிடுகிறார்கள். போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன.
மேலும் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தை பலவீனப்படுத்த ஏராளமானோர் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். மேலும் அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எனக்கு எதிராக செயற்படுகின்றன.
நான் யாரையும் பாதுகாக்க ஆட்சிக்கு வரவில்லை. ஊழல், மோசடி மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment