Ads (728x90)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் வைத்து சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாரஹென்பிட்டியிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவரும் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவரும் சாட்சியமளிப்பதற்காக இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget