வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் 16 பேர் மீண்டும் நீர்கொழும்புக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர்.
உதித்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களை அடுத்து நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளில் ஓரு தொகுதியினர் இரண்டு கட்டங்களாக அழைத்து வரப்பட்டு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வடமாகாண கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
பிரதேச அரசியல்வாதிகள், பொது அமைப்புக்கள் என பலரதும் எதிர்ப்புக்கு மத்தியில் அவர்கள் இராணுவ பொலிஸ் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment