எதிர்வரும் தினங்களில் வாக்கெடுப்பு நிலையங்களை சென்று கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் சுமார் 14 000 வாக்கெடுப்பு நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதித் தேர்தலின்போது குறித்த அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களையும் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் இறுதிப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment