Ads (728x90)

மட்டக்களப்பு-கள்ளியன்காடு இந்துமயானத்தில் புதைக்கப்பட்ட சீயோன் தேவாலயத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய காத்தான்குடி தற்கொலை குண்டுதாரியின் உடல் பாகங்களை மீள தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

26 ந்திகதி மாலை இரவோடுஇரவாக மட்டக்களப்பு கள்ளியன்காடு இந்துமயானத்தில் புதைக்கப்பட்ட மேற்படி பயங்கரவாதியின் உடலை அடக்கம் செய்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள ஒரு மயானத்தில் புதைக்கவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்து மயானத்தில் புதைத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கவில்லை. எனவே அரசாங்க அதிபர் செய்த தவறே இந்த பிரச்சனைக்கு காரணம் என நீதிபதி கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget