ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே தனது நோக்கம் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என வேறு படுத்துவது நியாயமற்றது என குறிப்பிட்ட அமைச்சர், எவ்வாறாயினும் ஒருமித்த இலங்கை என்ற கொள்கையில் எந்தவித விட்டுக் கொடுப்பும் செய்து கொள்ளப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே நோக்குவதாகவும் தெரிவித்த அமைச்சர், இவற்றை முன்னெடுக்க வேண்டுமாயின் இனவாதத்தை நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment